சினிமா

அடேங்கப்பா.. என்னவொரு மனசு! மகளின் பிறந்தநாளன்று நடிகர் மகேஷ்பாபு செய்த காரியம்! மனதார குவியும் பாராட்டுக்கள்!!

Summary:

தெலுங்கு சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகராக வல

தெலுங்கு சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது பல மாஸ் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மகேஷ்பாபு நடிப்பு மட்டுமின்றி ஏராளமான சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.

அவர் கொரோனா காலத்தில் பல்வேறு தரப்பு மக்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். மகேஷ் பாபு கடந்த சில காலங்களுக்கு முன்பு தனது அப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா நேற்று தனது 9வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார்.

அதனை முன்னிட்டு அவர் தெலுங்கானா மாநிலத்தின் சித்தாபூர் கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் இலவச தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் அவரது ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகள நல மையத்திற்கு உணவளிப்பது, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது என ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு பலரும் மனதார பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement