சினிமா

அட.. பாகுபலி படத்தில் வந்த இந்த குழந்தை பெண் குழந்தையா!! இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியாக வந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவிலேயே ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த மாபெரும் பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், சுதீப் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வலுவான கதாபாத்திரம் அமைந்து கதைக்கு திருப்புமுனையாக அமைந்தது.

பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 2 கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இந்த பாகுபலி ஒன்று படத்தில் ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்க பட்ட காட்சி, ராஜ மாதாவான சிவகாமி தேவி ஒரு பச்சிளம் குழந்தையை தனது கையில் தூக்கி வைத்து மகேந்திர பாகுபலி என கூறும் காட்சியாகும்.

அந்த குட்டி மகேந்திர பாகுபலி உண்மையில் ஒரு பெண்குழந்தையாம். அவரது பெயர் அக்ஷிதா. அந்தக் குழந்தை பிறந்த 18 நாட்களே ஆனநிலையில் பாகுபலி படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் நன்கு வளர்ந்த அக்குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
 


Advertisement