BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கெத்து காட்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா.! இதுவரை ஈட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவின் முன்னணி முக்கிய நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் மகாராஜா
மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், சாமி முனிஸ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏஎல் தேனப்பன் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். படத்திற்கு அஜனீஷ் பி. லோகநாதன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் 50வது படம்.! ரிலீஸ் எப்போ?? வெளிவந்த சூப்பரான அறிவிப்பு!!

மேலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் வெளியாகி 11 நாட்களில் 85 முதல் 90 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் 100 கோடியை ஈட்டி வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மகாராஜா திரைப்படம் ஜூலை 14 ஓடிடியில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதையும் படிங்க: வேற லெவல்தான்!! பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சூரியின் கருடன்.! 5 நாட்களில் இவ்வளவு வசூலா??