"யார் மீதும் காதல் வருவதற்கு ஒரே காரணம் நம்பிக்கை தான்" கணவரை நினைத்து மஹாலக்ஷ்மி உருக்கம்.!Mahalakshmi posted about her husband

லிப்ரா ப்ராடக்க்ஷன் நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தமிழ் சின்னத்திரை நடிகையான மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தின் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் மிகவும் பிரபலமடைந்தார்.

mahalakshmi

இந்நிலையில், இவர் மீது சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம் என்று கூறி 15கோடி வரை ஏமாற்றியதாக போலீசில் புகாரளித்தார்.

தொடர்ந்து ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார். இரண்டு முறை ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார் ரவீந்தர்.

mahalakshmi

இந்நிலையில், மஹாலக்ஷ்மி " யார் மீதும் காதல் வருவதற்கு ஒரே காரணம் நம்பிக்கைதான். ஆனால் இங்கே என்னைவிட நம்பிக்கை உன்னை அதிகம் நேசிக்கிறது. அதே அன்பை பொழிந்து முன்பு போல் என்னைக் காப்பாயாக. லவ் யு" என்று நீண்ட நாட்களுக்கு பிறகு கணவர் திரும்பி வந்ததால் மஹாலக்ஷ்மி பதிவிட்டுள்ளார்.