தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மதுரை முத்து வீட்டில் நடந்த மீண்டும் ஒரு சோகம்!. சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறையினர்!!
வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு சின்னத்திரை காமெடி நடிகர்களையும் மக்கள் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் பல மேடைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது காமெடி பேச்சின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மதுரை முத்து.
காமெடி நடிகர் மதுரை முத்து 'அசத்தப்போவது யாரு', கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று அசத்தினார். அதன் பின் சன்டிவி தொலைக்காட்சியில் 'சண்டே கலாட்டா' என்ற நிகழ்ச்சி மூலம் காமெடியில் ரசிகர்களை கவர்ந்துவந்தார்.
தன்னுடைய காமெடியால் சின்னத்திரை மூலம் மட்டுமின்றி அவ்வப்போது பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் அவர் சில படங்களிலும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துவின் மனைவி லேகா கார் விபத்தில் உயிரிழந்தார். அவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.அதனை தொடர்ந்து அவர் மறுமணம் செய்துகொண்டார்.
இந்தநிலையில் மதுரை முத்துவின் அம்மா வெள்ளைத்தாய் நேற்று காலை 8 மணியளவில் காலமானார். அவரின் இறுதி சடங்கு இன்று மாலை மதுரை திருமங்கலத்தில் நடைபெறுகிறது.