காமெடி நடிகர் மதுரை முத்து வீட்டில் நேர்ந்த மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

காமெடி நடிகர் மதுரை முத்து வீட்டில் நேர்ந்த மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!



Madurai muthu father dead

பிரபல முன்னணி தொலைக்காட்சியில்  அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற  நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு,  தனது திறமையால் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மதுரை முத்து. அதனைத் தொடர்ந்து அவர் சன்  தொலைக்காட்சியில்  சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியிலும் தனது காமெடி பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 

இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரை முத்துவின் மனைவி லேகா கார் விபத்தில் உயிரிழந்தார். அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மதுரைமுத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

madurai muthu
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது  அப்பா ராமசாமி வயது மூப்பினாலும்,  உடல்நலக்குறைவாலும் உயிரிழந்துள்ளார். இதனால் முத்துவின் குடும்பத்தினர் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஊரடங்கால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.