தமிழகம் சினிமா

எப்படி இருந்த மாதவன் மீண்டும் எப்படி மாறிவிட்டார் பாருங்கள்! வியந்துபோன ரசிகர்கள்!

Summary:

madhavan again come back


பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். முதல் படமே மாபெரும் வெற்றிப்படம் என்பதால் இவருக்கு அதிகப்படியான பெண் ரசிகர்கள் உருவானார்கள். அதை தொடர்ந்து மின்னலே திரைப்படம் மூலம் அனைத்து பெண்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் மாதவன்.

இந்தநிலையில் நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அதற்காக அவரைப் போலவே முகத்தில் நீண்ட தாடியுடன் நடித்து வந்தார்.  அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார் சாக்கலேட் பாய் மாதவன்.

அவர் அந்த படத்திற்காக போடப்பட்ட கெட்டப் , நடிகர் மாதவன் தானா இது? என ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன்.

ஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். 

படப்பிடிப்பு பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. புதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். மீண்டும் சாக்லேட் பாயாக மாறிவிட்டார் மாதவன் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Advertisement