சினிமா

அப்போ இல்லை.. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மரணம்! வருத்தத்துடன் மாநாடு படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் மாநாடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அவர்களுடன் பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் முதல் பாடலை மே 14 ரம்ஜானை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அண்மையில்  இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் உடல்நல குறைவால் காலமானதை தொடர்ந்து பாடல் வெளியீட்டை சில காலங்களுக்கு தள்ளி வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டர் பக்கத்தில், நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது  மாநாடு படத்தின் முதல் பாடல் நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement