செம அப்டேட்.! எப்போ, மாமன்னன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு.?

செம அப்டேட்.! எப்போ, மாமன்னன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு.?


maamannan-second-single-updatw

தமிழ் சினிமா இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இது கல்வி குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இவர் இயக்கிய கர்ணன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் உற்று நோக்கும் இயக்குனராக உயர்ந்தார் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன்.

Mamannan

இந்தத் திரைப்படத்தில் பகத் பாஸில்  கீர்த்தி சுரேஷ் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அரசியல் களத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் முதல் பாடல்  கடந்த வாரம் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசைக்கு வைகை புயல் வடிவேலு  பாடியிருந்தார். ஒப்பாரிப் பாடலான இது ரசிகர்களின் மனதை நெகிழ வைக்கும் வகையில் இருந்தது.

Mamannan

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின்  ஜிகு ஜிகு ரயில் என்ற பாடல் நாளை  காலை 11:00 மணிக்கு வெளியாக இருக்கிறது முதல்  பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் இரண்டாவது பாடல் சினிமா ரசிகர்கள் மற்றும் இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. மேலும் ஏ.ஆர் ரகுமான் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.