அடப்பாவமே.. பிரபல பாடலாசிரியரின் மகள் தூரிகை தற்கொலை செய்ததற்கு இதுதான் காரணமா?..! நம்பவே முடியல..!!



lyricist kabilan daughter death

திரைப்பட பாலாசிரியரும், கவிஞருமான கபிலரின் மகள் தூரிகை (வயது 28). இவர் சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக வடபழனியில் இருக்கும் தனியார் மௌர்த்துவமணியில் அனுமதி செய்யவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே தூரிகை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

kabilan daughter

சம்பவ இடத்திற்கு விரைந்த வடபழனி காவல் துறையினர், தூரிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், பெற்றோர் தூரிகையை திருமணத்திற்க்கு வற்புறுத்தியதால் விபரீத முடிவை எடுத்தும் தெரியவந்தது.

தூரிகை எம்.பி.ஏ பயின்றுள்ள நிலையில், தனியார் ஆங்கில ஊடககத்திற்கு கட்டுரைகள் எழுதிக்கொடுத்து வந்துள்ளார். மேலும், Being Woman என்ற இணைய இதழையும் தொடங்கி நடத்தி வந்துள்ளார். பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.