பிக்பாஸ் லாஸ்லியாவா இது.! ஆர்மியை குஷிப்படுத்தி வைரலாகும் இதுவரை காணாத புதிய புகைப்படம்!!



losliya young age photo viral

   பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.  

losliya

மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாளிலேயே அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத  குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.

losliya

இந்நிலையில் லாஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதனை லாஸ்மியா ஆர்மி வைரலாக்கி வருகிறது.