லாஸ்லியாவுக்கு முதல் படத்திலேயே அடித்த மிகப்பெரிய லக்! இந்த ஆக்சன் கிங்கும் இணைகிறாரா! இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!



Losliya arjun

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே சென்றவர் லாஸ்லியா.இவர் வீட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களுக்குள் இவருக்கு ஏகப்படியான ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது.

மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்டவர்கள் கவின் லாஸ்லியா என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஹுரோயினாக புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.

losliya

அதாவது இவர் நடிக்கும் முதல் படத்திலேயே இவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதாவது தமிழில் முன்னணி நடிகரான ஆக்சன் கிங் அர்ஜூன் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதனை கேள்வி பட்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் முழ்கியது மட்டுமின்றி லாஸ்லியாவுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மேலும் அர்ஜுன் நடிக்கிறார் என்றாலே அது கண்டிப்பாக ஆக்சன் கலந்த படமாக தான் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இப்படத்தின் வருகைக்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.