பிக்பாஸ் கவினுடன் காதலா? முதன்முறையாக மனம்திறந்த லாஸ்லியா! என்ன சொல்லியிருக்காரு பார்த்தீர்களா!!

பிக்பாஸ் கவினுடன் காதலா? முதன்முறையாக மனம்திறந்த லாஸ்லியா! என்ன சொல்லியிருக்காரு பார்த்தீர்களா!!


losliya-answered-about-relationship-with-kavin

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார்.  ஆனால் நாளடைவில் அவர் மற்றொரு போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஆனால் பிக்பாஸ்  வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர். மேலும் இருவருக்கும் தனித்தனியாக ஏராளமான பட வாய்ப்புகள் வர துவங்கியது.  கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாஸ்லியா பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனாலும் நெட்டிசன்கள் இன்னும் கவின் மற்றும் லாஸ்லியா காதலிப்பதாக கூறி வருகின்றனர்.

losliya

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லாஸ்லியாவுடன் கவினுடனான காதல்,உறவு குறித்து கேட்டபோது அவர், எனக்கும் கவினுக்கும் இருப்பது பர்சனல் விஷயம். அதை விட்டுவிட்டு என் படத்தை பற்றி மட்டும் கேளுங்கள். எனக்கும் கவினுக்கும் இருப்பது என்ன என்பதை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை என லாஸ்லியா கூறியுள்ளார்.