சினிமா

நான் உயிரோடதான் இருக்கேன்.. நடந்தது இதுதான்! குழப்பத்தால் பரவிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த லொள்ளுசபா மாறன்!!

Summary:

தமிழ் சினிமாவில் கில்லி, தலைநகரம்,பாஸ் என்கிற பாஸ்கரன், கே.ஜி.எஃப் அத்தியாயம் 1  மற்ற

தமிழ் சினிமாவில் கில்லி, தலைநகரம்,பாஸ் என்கிற பாஸ்கரன், கே.ஜி.எஃப் அத்தியாயம் 1  மற்றும் சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாறன். இவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவரது மரணம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சில ஊடகங்களில் பெயர் குழப்பத்தால் தவறுதலாக காமெடி நடிகரான லொள்ளுசபா மாறன் இறந்து விட்டதாக தகவல்கள் பரவியது. இவர் சந்தானத்தின் ஏ1 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் இறந்ததாக பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து லொள்ளுசபா மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், அந்த மாறன் நான் இல்லை, அது வேற மாறன். சில ஊடகங்கள் குழப்பத்தால் தனது புகைப்படத்துடன் தவறான செய்திகளை வெளியிட்டன. பின்னர் அது நான் இல்லை என தெரிந்ததும் அதனை சரிசெய்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் தொடர்ந்து இவ்வாறு ஏற்படும் மரணங்கள்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. நான் நல்லபடியாக இருக்கிறேன். கொரோனா ஒரு ஆபத்தான தொற்று. அனைவரும் பாதுகாப்பாக, எச்சரிக்கையாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 


Advertisement