அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்ட லோகேஷ்.. லோகேஷை பங்கமாக கலாய்த்த தளபதி.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய்.. இவர் பல படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார். நடிப்பின் மூலம் ரசிகர் கூட்டத்தை கவர்ந்து 'இளைய தளபதி' எனும் பெயர் பெற்றிருக்கிறார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாஸ்டர்' படத்தில் அர்ஜுன் தாஸ், சாந்தனு போன்ற பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேலும், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைந்த 'மாஸ்டர்' திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் சாந்தனு யூடுப் சேனல் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் என்னிடம் மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்த காட்சிகள் எடிட் செய்யப்பட்ட சில காட்சிகளே இருந்தன. இதற்காக லோகேஷ் கனகராஜ் சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்டாராம். அந்த நேரத்தில் நடிகர் விஜய் தலையிட்டு காமெடியாக மாற்றினார் என்று சாந்தனு பேட்டியில் கூறியுள்ளார்.