மாஸ்டர் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெளிவந்த தகவல்!!Lokesh kanagaraj salary for master movie

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் திறமையான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அதிலும் ஹீரோயின் இல்லாமல், பாட்டு இல்லாமல் அவர் இயற்றிய கைதி திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. 

அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியுள்ளார். மேலும் அவர்களுடன் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மஹேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

salary

இந்தப் படமும் செம்ம ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் படத்திற்காக 2 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.