சினிமா

என்னது! விஜய்யை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவது இந்த டாப் ஸ்டாரின் படத்தையா? டைட்டிலே சும்மா மாஸ் காட்டுதே! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Summary:

Logesh kanagaraj tweet about his next movie

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி  மற்றும் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் ஆகிய மூன்று படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். இவரது இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் கொரோனோவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், ரிலீசாவது தள்ளி போயுள்ளது.

அதனை தொடர்ந்து அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ரஜினி அண்ணாத்த படத்தில் பிஸியாக இருப்பதால் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கஉள்ளார் என்ன தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை நேற்று மாலை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலின் 232 வது படத்தை இயக்கவிருப்பதாகவும் அதற்கு எவனென்று நினைத்தாய் என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறி போஸ்டர் ஒன்றையும்  வெளியிட்டுள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement