தன் கணவர் சினிமாவில் ஜெயிக்க, லோகேஷ் கனகராஜின் காதல் மனைவி செய்த காரியம்.! நெகிச்சியுடன் பகிர்ந்த இயக்குனர்.!Logesh kanagaraj shares about his wife

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து அவர் கைதி, மாஸ்டர் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. இப்படங்களுக்கு பிறகு லோகேஷ் முக்கிய, முன்னணி இயக்குனரானார். 

அவர் தற்போது விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆனால் அவர் சினிமா துறையில் நுழைவதற்கு பெருமளவில் சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

Logesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் பேட்டியில், நல்ல வேலையில் இருந்து சம்பாதித்த போதும் சினிமா மீது கொண்ட ஆசையில் வேலையை விட்டுவிட்டு படம் இயக்குவதற்கான வாய்ப்பை தேடினேன். மேலும் மாநகரம் படத்திற்கு பிறகு இரண்டாவது படத்தில் கமிட்டாக நீண்ட காலங்கள் ஆனதால் வருமானம் இல்லாத காரணத்தினால் எங்களது குடும்பத்திற்கு உறுதுணையாக என் மனைவி வேலைக்கு சென்றார்.

 தனது குழந்தை ஏழு மாதமாக இருந்த போதும் கூட அவர் வங்கியில் வேலை பார்த்தார். 2வது  படத்தில் கமிட்டான பிறகு தான் நான் அவரை வேலையை விடக் கூறினேன். அவரால்தான் என்னால் சினிமாவில் சாதிக்க முடிந்தது  என மனைவி குறித்து பெருமையோடு கூறியுள்ளார்.