சினிமா

மாஸ்டர் படத்தை 10 தடவை பார்த்துட்டேன்! எப்படியிருக்கு தெரியுமா? முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

Logesh ganagaraj talk about master movie

மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் தான் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், தற்போது நாடு முழுவதும் ஏற்ப்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது.  இந்நிலையில் படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது, நான் இப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். தளபதி விஜய்யின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் கண்டிப்பாக  மாஸ்டர் திரைப்படம் பிடிக்கும் என கூறியுள்ளார்.

 


Advertisement