நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம்.! நடிகை திரிஷாவிற்கு காவல்துறையினர் அனுப்பிய கடிதம்!!

நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம்.! நடிகை திரிஷாவிற்கு காவல்துறையினர் அனுப்பிய கடிதம்!!


letter sent to trisha from police station for mansoor alikhan controversy

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மன்சூர் அலிகானிற்கு  திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை திரிஷாவும்,  மன்சூர் அலிகானை, வன்மையாக கண்டிக்கிறேன். மனித குலத்திற்கே அவமரியாதையை ஏற்படுத்துகிறார் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவிட்ட நிலையில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர்  போலீசார் இரு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
மேலும் நடிகை மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

 இந்நிலையில் நடிகை திரிஷாவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தவறு செய்பவன் மனிதன்.அதை மன்னிப்பவன் தெய்வம் என்று குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பில் இருந்து விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.