"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!
விஜய் ஆண்டனிக்காக 'லியோ' படக்குழு செய்திருக்கும் நெகிழ்ச்சி செயல்.!
விஜய் ஆண்டனிக்காக 'லியோ' படக்குழு செய்திருக்கும் நெகிழ்ச்சி செயல்.!

தமிழில் பிரபலாமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் பன்முகத் திறமை கொண்டவர். இவருக்கு மீரா, லாரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல் விஜய் ஆண்டனி தன்அறைக்கு உறங்கச் சென்றுள்ளார்.
திடீரென அதிகாலையில் தன் மகளின் அறைக்குச் சென்று பார்த்த போது, அவரது மகள் மீரா(16 வயது) தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ஆண்டனி, தன் மகளை மீட்டு காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, போலீசார் அவரது மகள் உடலை மருத்துவக் கூராய்வுக்கு கொண்டு சென்றனர். மீரா ஏற்கனவே சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் திரையுலகில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திரைப் பிரபலங்கள் அனைவரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், "லியோ" படக்குழு, விஜய் ஆண்டனியின் மகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று வெளியிட இருந்த லியோ படப் போஸ்டரை, நாளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.