"லியோ படத்தின் வசூல் ஆயிரம் கோடியை தாண்ட வாய்ப்பில்லை" நம்பிக்கை இழந்து பேசிய தயாரிப்பாளர்..



leo-movie-producer-interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leo

மேலும் இப்படம் வெளியாவதற்கு முன்பு பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி வந்தது. படம் திரையரங்கில் திரையிடப்படுமா இல்லையா என்று ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் படத்தின் தயாரிப்பாளர் குழு நாலு மணி காட்சிக்காக நீதிமன்றம் வரை சென்றது. இவ்வாறு பலவிதமான பிரச்சனைகளை கடந்து லியோ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Leo

இது போன்ற நிலையில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டார். அதில் நாலு மணி காட்சிக்காக நீதிமன்றம் சென்றதற்காக விஜய் கடிந்து கொண்டதை பற்றி கூறினார். மேலும் இப்படம் ஆயிரம் கோடி வசூல் தாண்டாது என்று நம்பிக்கை இழந்து பேசியுள்ளார். இதற்கு அவர் காரணம், "நாலு மணி காட்சி தமிழ்நாட்டில் மட்டும் தான் திரையிடப்படவில்லை. மேலும் இந்த மார்க்கெட்டில் பெரிதளவில் வசூல் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.