நம்ம லெஜெண்ட் அண்ணாச்சியா இது.? அடையாளம் தெரியாமல் ஆளே மாறிட்டாரு.!

நம்ம லெஜெண்ட் அண்ணாச்சியா இது.? அடையாளம் தெரியாமல் ஆளே மாறிட்டாரு.!


legend-saravanan-viral-photo

சரவணாஸ் ஸ்டோர்ஸ் தமிழ்நாட்டின் பிரபலமான நிறுவனங்களுள் ஒன்று. இதனுடைய உரிமையாளர் சரவணன் ஆவார். இவர் ஆரம்பத்தில் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து வந்தார். அப்போது நிறையபேர் அவர் உருவத்தை வைத்து கிண்டல் செய்தனர். ஆனால் அவரோ அதைபற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இந்த பக்கம் தமன்னா அந்த பக்கம் ஹன்சிகா என தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து அசத்தி வந்தார்.

Legend

அவரின் அந்த நடிப்பு தாகம் விளம்பரத்தோடு நிற்காமல் சினிமாவிலும் நடிக்க தூண்டியது. அதனால் தானே தயாரித்து நடிக்க முடிவு செய்தார். சிறு பட்ஜெட்டில் எடுக்காமல் பெறும் பொருட் செலவில் எடுக்கும் எண்ணத்திலும் கதைகள் கேட்க தொடங்கினார்.

அதன்படி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவருடன் விவேக், பிரபு, விஜயகுமார், ஊர்வசி ரத்தோலா போன்றவர்களும் நடித்தனர். இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது.

Legend

தற்போது லெஜெண்ட் சரவணனின் புகைப்படம் ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தாடி , மீசையெல்லாம் வைத்துக்கொண்டு அற்புதமாக காணப்படுகிறார். ஒருவேளை இது அவருடைய அடுத்த படத்தின் கெட்டப்பாக இருக்கக்கூடும் என அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.