புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"அவர் தப்பு செய்திருந்தாலும் நாங்கள் ரசித்தோம்!" லாரன்ஸ் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி "சொல்வதெல்லாம் உண்மை". இந்நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். குடும்பம் அல்லது தனி நபர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு உளவியல் மற்றும் சட்ட ஆலோசனைகளை இன்நிகழ்ச்சி வழங்குகிறது.
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் லாரன்ஸ் என்பவர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய அனைத்தும் தற்போது வரை மீம்ஸ்களாகவும், ரீல்ஸ்களாகவும் பகிரப்பட்டு வருகின்றன. "மேடம் இது நடிப்பு மேடம்" என்று இவர் பேசியது இன்றுவரை பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் லாரன்ஸ் குறித்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், "அன்று லாரன்ஸ் வந்தது எனக்கு இன்று நினைவு வருகிறது. அவரிடம் நிறைய ஹியூமர் உள்ளார்.
நாங்கள் நினைத்திருந்தால் அவர் பேசிய பகுதிகளை நீக்கியிருக்கலாம். வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வந்திருப்பார். அவருக்குள் அப்படி ஒரு திறமை இருந்தது. நாங்கள் ரசித்தோம்" என்று கூறியுள்ளார். லாரன்ஸ் இறந்துவிட்டார் என்ற செய்தி சில நாட்களாக பரவி அவர் வருவது குறிப்பிடத்தக்கது.