சினிமா

சினிமாவை விட்டுட்டு இதை செய்யுங்க! வேண்டுகோள் விடுத்த ரசிகர்! நடிகை லட்சுமி மேனன் கூறிய பதிலை பார்த்தீர்களா!

Summary:

Lakshmi menon response to fan who said to marry

தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து சுந்தரப்பாண்டியன் என்ற  படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். அதனை தொடர்ந்து அவர் கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் மற்றும் இறுதியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க படத்திலும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் நடனம் கற்று வருகிறார். மேலும் அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் லட்சுமி மேனனிடம், நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்வை வாழுங்கள். தயவுசெய்து சினிமாவை விட்டு விலகுங்கள். நீங்கள் ஏஞ்சல் என்று குறிப்பி்ட்டுள்ளார்.

அதற்கு லட்சுமி மேனன் என் மீது  அன்பான, அக்கறையுள்ள இவரைப் பாருங்கள். என்னைப் போன்ற ஒரு தேவதை யாரையாவது திருமணம் செய்துகொண்டுஅமைதியைக் காண வேண்டும் என்று நினைக்கிறார் வெறும் பரிதாபகரமானது என தெரிவித்துள்ளார்


Advertisement