பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
ரஜினிகாந்தின் மனைவிக்கு இந்த நிலைமையா.. முக்காடு போட்டு வந்த லதா.! பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2014ம் ஆண்டு "கோச்சடையான்" என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தை மீடியா ஒன் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் முரளி என்பவர் தயாரித்திருந்தார்.
இந்தப் படத்திற்காக முரளி, ஆட் பீரோ என்ற நிறுவனத்தின் அபிசந்த் நவாஹர் என்பவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையெழுத்திட்டுள்ளார். எனவே தற்போது அந்தப் பணத்தை முரளி திருப்பி செலுத்தாததால் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோச்சடையான் படம் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காத நிலையில், முரளியால் 6.2 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தமுடியவில்லை. பெங்களூர் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அவ்வழக்கின் விசாரணையில் கலந்து கொள்ள வந்த லதா தலையில் முக்காடு இட்டு வந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக விசாரணையில் லதா ஆஜராகாவிட்டால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.