ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"தனுஷுக்காக இதை செய்யப் போகிறேன்".. லப்பர் பந்து பட இயக்குனரின் அதிரடி பேச்சு.!?
கடந்த வருடத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக "லப்பர் பந்து" இருந்தது. பிரண்ட்ஸ் பிக்சர் புரொடக்ஷன்ஸ் சார்பில், லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கிய "லப்பர் பந்து" திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா விஜய், பால சரவணன், காளி வெங்கட் போன்ற பல பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததால் லப்பர் பந்து பட இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று தமிழ் திரை துறையில் கவனத்தை ஈர்த்தார்.

இப்படத்திற்குப் பின்பு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, இயக்கப் போகும் திரைப்படத்தை குறித்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இதன்படி தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆகாஷ் பாஸ்கரின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது.
இதையும் படிங்க: 96 படம் குறித்த சூப்பர் செய்தி... ரசிகர்களே தயாரா.?! வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்.?!
இது போன்ற நிலையில் இப்படத்தை குறித்து தமிழரசன் பச்சமுத்து பத்திரிகையாளர்களிடம் பேசி இருப்பது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, "தனுசை சந்தித்து பேசி இருக்கிறேன். அவருக்காக பிரத்தியேகமான கதையை உருவாக்கி வருகிறேன். இப்படம் லப்பர் பந்து படத்தை விட சிறப்பாக அமையும். மேலும் தனுஷ் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டாடும் விதமாக கண்டிப்பாக அமையும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் ஆண்டனிக்கு இப்படியொரு வித்தியாசமான பழக்கமா?? அதற்கு இதுதான் காரணமா!! அவரே சொன்ன விளக்கம்!!