நடிகை மீனாவின் கணவர் மரணம்.! கண்ணீருடன் குஷ்பு பதிவிட்ட உருக்கமான பதிவு.!kushboo twwt about meena husband death

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. நடிகை மீனாவிற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனா கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரொனாவில் பாதிப்படைந்தனர். கொரோனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் காரணமாக வித்யாசாகர் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு  காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமனார்.


மீனா கணவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மீனாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மோசமான செய்தியுடன் காலை எழுந்திருக்கிறேன். நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.