13 வயதில் குஷ்பு நடத்திய முதல் போட்டோ சூட்; அப்பவே எவ்ளோ அழகுனு பாருங்க! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் சினிமா

13 வயதில் குஷ்பு நடத்திய முதல் போட்டோ சூட்; அப்பவே எவ்ளோ அழகுனு பாருங்க!

1980களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையைத் துவங்ககய நடிகை குஷ்பு, 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளமபோன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். 

இயக்குனர் சுந்தர் சியை மணந்த குஷ்பு தற்பொழுது சில குணச்சித்திர வேடங்களிலும், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். 

ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றிய இவர், பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். தேசிய அரசியலில் ஆளும் கட்சியை எதிர்த்து விமர்சனம் நபர்களில் இவரும் முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார்.

 

இவ்வாறு சிறுவயதிலிருந்தே படிப்படியாக முன்னேறிய குஷ்புவிற்கு ஆரம்பத்தில் சில வாய்ப்புகள் கைநழுவி சென்றுள்ளது. 1983ல் 13 வயதிலேயே கதாநாயகியாக வேண்டிய குஷ்புவுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதுகுறித்து தனது ட்விட்டரில் 13 வயதில் எடுத்த முதல் போட்டோ சூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு, "1989ல் என்னுடைய 13 வயதில் போனிகபூரின் படமான பிரேமில் சஞ்சய் கபூருடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு கைநழுவியது. பின்னர் 86ல் சென்னைக்கு வந்ததும் என் வாழ்க்கை முற்றிலும் மாறியது. நடந்தது எல்லாம் நன்மைக்கே" என பதிவிட்டுள்ளார். 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo