பரபரப்பை கிளப்பி இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் வெளியிட்ட வீடியோ! எல்லாம் இதுக்குதானா! டென்ஷனான ரசிகர்கள்!!ks-ravikumar-promotion-video-for-mathil-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், உங்கள மாதிரி நானும் சராசரி இந்திய குடிமகன்தான். எல்லாருக்கும் இருக்க மாதிரி எனக்கு சொந்தமா வீடு கட்டனும்னு  கனவு இருந்துச்சு. கஷ்டப்பட்டு, ஒரு அழகான வீடு கட்டுனேன். அங்க சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா ஒரு பிரச்சனை. நம்ம என்ன கோழையா? எதிர்த்து கேள்வி கேட்டேன். இப்ப பிரச்சினை பெரிதாகி விட்டது.  என்ன பண்றதுன்னு புரியவில்லை அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என கூறியிருந்தார்.

இந்த வீடியோ வெளியான நிலையில் அவருக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் பலரும் குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், இரு நாட்களாக எனக்காக பலரும் ஆதரவாகப் பேசினீர்கள். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. அந்த வீடியோவில் நான் நடிக்கிற மதில் படத்தின் கதாபாத்திரமாக பேசினேன்.  சொந்த வீடு வைத்துள்ள பலருக்கும் ஏற்படும் பிரச்சினையைதான் இப்படத்தில் கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

KS Ravikumar

பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள மதில் படத்தில் கே.எஸ் ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் விளம்பரத்திற்காக தான் அவர் அவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் படத்தின் விளம்பரத்திற்காக இப்படியா செய்வது என டென்ஷன் ஆகியுள்ளனர்.