கலக்கப்போவது யாரு மொட்டை ராஜேந்திரன் சரத்திற்கு விரைவில் டும்டும்டும்! பொண்ணு யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!kpy-sarath-marriage-with-his-lover

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ஏராளமானோர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சரத்.

பார்ப்பதற்கு மொட்டை ராஜேந்திரன் போலவே இருக்கும் சரத், தீனாவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் அசத்தியுள்ளார். சரத் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த சத்யா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சரத்திற்கு, கிரித்திகா என்ற பெண்ணுடன் மார்ச் 6-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக திருமண பத்திரிக்கை ஒன்றை  சரத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Krithika

இதில் ஸ்பெஷல் என்னவென்றால் சரத் மற்றும் கிரித்திகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்களாம். இந்நிலையில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.