உனக்கா இப்படி.. மருத்துவமனைக்குச் சென்று பிரியங்காவை தாறுமாறாக கலாய்த்த விஜய்டிவி பிரபலம்! வைரலாகும் வீடியோ!!

உனக்கா இப்படி.. மருத்துவமனைக்குச் சென்று பிரியங்காவை தாறுமாறாக கலாய்த்த விஜய்டிவி பிரபலம்! வைரலாகும் வீடியோ!!


kpy-dheena-teasing-priyanga-in-hospital

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இவரது சிரிப்புக்கு எனவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

யார் எவ்வளவு கலாய்த்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தனது பங்கிற்கும் கலாய்த்து விட்டு ஜாலியாக இருக்கக் கூடியவர். மக்களால் பெரிதும் விரும்பப்படும் தொகுப்பாளினியான பிரியங்கா அண்மையில் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாள் வீடியோவையும் ப்ரியங்கா தனது யூடியூப் சேனலில் வெளியிடுவார். இந்தநிலையில் பிரியங்காவை சந்திக்க கலக்கப்போவது யாரு தீனா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் அங்கு பிரியங்காவை தாறுமாறாக கலாய்த்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.