சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ரொம்ப சந்தோஷம்.. பாதம் தொட்ட நன்றிகள்.! நெகிழ்ச்சியுடன் kpy பாலா வெளியிட்ட வீடியோ.! ஏன்? என்ன காரணம்??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை கவர்ந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாலா. டைமிங்கில் அவர் செய்யும் காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கும். மேலும் பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது காமெடியால் ரசிகர்களை மகிழ்வித்தார்.
மேலும் அவர் தற்போது சினிமாவிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். பாலா பிறருக்கு உதவும் பரந்த மனம் கொண்டவர். தனது சம்பாத்தியத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து கஷ்டப்படும் பலருக்கும் தன்னால் முடிந்த ஏராளமான உதவிகளை செய்து பலரின் பாராட்டுக்குரியவராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், எனது வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. அதற்கு காரணம் நீங்கள் எல்லோரும்தான். சமீபத்தில் சாஸ்திகா என்ற குழந்தை அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது மருத்துவச் செலவுக்கு 8 கோடி ரூபாய் தேவைப்படுகிறது எனவும் கூறி வீடியோ போட்டிருந்தேன்.
இதையும் படிங்க: ஜோடி பொருத்தம் சூப்பர்!! கங்கை நதி கரையில் காதலரை கரம்பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.! வைரல் புகைப்படங்கள்!!
அந்த வீடியோவை பார்த்து ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சேர்ந்து உதவி செய்து அந்த குழந்தை தற்போது 8 கோடி ரூபாய் ஊசி செலுத்தப்பட்டு அவர் நலமாகி நம்மைப் போல் பூமியில் வாழப் போகிறார். ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் இந்த பாலாவின் பாதம் தொட்ட நன்றிகள் என உணர்வுபூர்வமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!