சினிமா

அடேங்கப்பா! இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தில் யாரை இறக்குகிறார் பார்த்தீர்களா! வேற லெவல்தான்..

Summary:

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. இத

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. இதன் சூட்டிங் படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா ஊரடங்கு என தொடர்ந்து பல காரணங்களால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அப்படத்தில் தெலுங்கு திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் ஹீரோவாக நடிக்கவுள்ளார். முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஜியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஹீரோயினாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாரா என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement