"என்னால இந்த படத்துல நடிக்க முடியாது" ரஜினியின் அந்த ஹிட் படத்தில் நடிக்க மறுத்த பிரகாஷ் ராஜ்..

"என்னால இந்த படத்துல நடிக்க முடியாது" ரஜினியின் அந்த ஹிட் படத்தில் நடிக்க மறுத்த பிரகாஷ் ராஜ்..


Kollywood cinema artist talk about baba movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்த வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் கதாநாயகனாகவும், குணசேத்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். பல திறமைகளை கொண்ட பிரகாஷ்ராஜ் தொடர்ந்து திரைப்படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார்.

rajini

இவரது வில்லன் கதாபாத்திரம் மக்கள் மனதில் எப்போதும் தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் 'கில்லி' திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைத்து சினிமா ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இதுபோன்ற நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான 'பாபா' திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

rajini

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துக் கொண்டிருக்கும் போது சில குழப்பங்கள் ஏற்பட்டது. பிரகாஷ்ராஜ் அவரின் அசிஸ்டெண்டாக இருப்பவரிடம் இந்த கதாபாத்திரம் முக்கியமானதாக பாபா படத்தில் இருக்குமா என்று  இப்படத்தின் அசிஸ்டன்ட் டைரக்டரிடம் கேட்டிருக்கிறார். அவர் தயக்கத்துடன் பதிலளிக்கவே இப்படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் விலகிவிட்டார் பிரகாஷ்ராஜின் இந்த செயல் ரஜினியை கலக்கமடைய வைத்தாலும், அவர் வெளிக்காட்டி கொள்ளவில்லை என்று சினிமா வட்டாரங்கள் பேசி கொள்கின்றனர்.