"நான் அந்த மாதிரி பெண் அல்ல" இன்ஸ்டாகிராம் லைவில் மனம் வருந்திய நடிகை கிரண்.?

"நான் அந்த மாதிரி பெண் அல்ல" இன்ஸ்டாகிராம் லைவில் மனம் வருந்திய நடிகை கிரண்.?



Kiran instagram live

2001ம் ஆண்டு "மிதுனம்" என்ற படத்தில் அறிமுகமானவர் கிரண் ரத்தோட். தொடர்ந்து தமிழில் ஜெமினி, அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வெற்றி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் திருமலை படத்தில் விஜயுடன் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார்.

kiran

தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ள கிரண் ரத்தோட், கடைசியாக 2016ம் ஆண்டு தமிழில் "இளமை ஊஞ்சல்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் தெலுங்கிலும் "பாஜா பஜன்ட்ரீலு" என்ற பெயரில் வெளியானது.

அதன்பிறகு தற்போது வெளியாகவுள்ள "லியோ" படத்தில் கிரண் நடித்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த கிரண் சமீபத்தில் ஒரு பேட்டியில், " நான் ஒருவரைக் காதலித்தேன். சீக்கிரமாகவே திருமணமும் செய்துகொண்டேன். அதுதான் நான் செய்த முட்டாள்தனம்.

kiran

என் அப்பா ஒரு பெரிய பணக்காரர். நான் எப்போதும் ஒரு ஆடம்பர வாழ்க்கையே வாழ்ந்திருக்கிறேன். என் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து சிலர் எனக்கு ஆஃபர் தருகிறேன் என்கிறார்கள். படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் நான் அந்த மாதிரி பெண் அல்ல" என்று கிரண் கூறியுள்ளார்.