வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி கொடுத்த திரைபிரபலங்களுக்காக, கேரளா முதல்வர் செய்த செயல்.!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி கொடுத்த திரைபிரபலங்களுக்காக, கேரளா முதல்வர் செய்த செயல்.!


kerala-chiefminister-said-thank-you-to-tamil-artists

 சமீபத்தில் கேரளாவில் 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தொடர் கனமழை பெய்து,அதனால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.மேலும் இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானர்.

மேலும் மழை வெள்ளத்தாலும்,நிலச்சரிவாலும் சுமார் 400 உயிர்கள் பலியானர்.மேலும் பலர்  வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

karala

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் அரசியல் தலைவர்கள்,திரைப்பிரபலங்கள் மற்றும்   பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினரும் தானே முன் வந்து நிவாரணங்களையும்,நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.

இதனை அடுத்து மத்திய அரசு, கேரளாவில் ஏற்பட்ட இந்த பேரழிவை, தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது.

மேலும் தற்போது மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். 

karala

இந்நிலையில், கேரளாவுக்கு அதிகளவு நிதியுதவி அளித்தமைக்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.