சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Summary:

Keerthy suresh acting with rajini at thalaivar168

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 168 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிவா இந்தப் படத்தினை இயக்குகிறார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த #தலைவர்168 படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 


மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிப்பது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் இது என்றும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 


Advertisement