நடிகை சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய டாப் நாயகி! அட.. கூட யார் இருக்கானு பார்த்தீங்களா!!

நடிகை சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய டாப் நாயகி! அட.. கூட யார் இருக்கானு பார்த்தீங்களா!!


keerthi-suresh-birthday-wishes-to-samantha

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விவாகரத்து செய்து பிரிய போவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் சமந்தா சுற்றுலா செல்வது, படங்களில் நடிப்பது என செம பிசியாக இருந்து வருகிறார். தற்போது சமந்தா நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா மற்றும் அட்லீயின் மனைவி பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் டியர் சாம், எப்பொழுதும் அசத்திக் கொண்டே இருங்கள். அழகான கதீஜாவுக்கு எனது ஸ்பெஷலான வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.