சினிமா

பிரமாண்ட திரைப்படம்! ராமராக நடிக்கும் பிரபாஸ்! சீதாவாக நடிக்கபோவது இந்த நடிகையா? தீயாய் பரவும் திரைப்படம்!

Summary:

Keerthi suresh act as seetha in adhipursh

தன்ஹாஜி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். பிரபாஸின் 22வது படமான இதனை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக உள்ளது.  இந்திய காவியத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கு  மொழிகளில் உருவாக்கப்பட்டு, இதர மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன் மூலம் படம் ராமாயணம் கதையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் நடிகர் பிரபாஸ் ராமராக நடிக்கவுள்ளதாக இயக்குநர் நாக் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து  சீதாவாக நடிக்கப் போவது யார் என ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.  இந்நிலையில் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்து படக்குழுவினர் ஆலோசித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Advertisement