பார்ரா..புதுப்பேட்டை படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிக்பாஸ் பிரபலமா?? இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே!!kayathri-raguram-first-selected-to-avt-in-snega-role

தமிழ் சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான திரைப்படம் புதுப்பேட்டை. இந்த திரைப்படத்தில் தனுஷ் வித்தியாசமான மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். புதுப்பேட்டை திரைப்படத்தை தனுஷின் அண்ணனான பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருந்தார்.

இப்படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும் தற்போதும் ரசிகர்கள் புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் சினேகா விலைமாதுவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Snega

 இப்படத்தில் முதலில் சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம். டெஸ்ட் ஷுட் எல்லாம்  எடுத்துள்ளனர். ஆனால் 6 மாதம் கழித்துதான் ஷூட்டிங் தொடங்கவுள்ளது என இயக்குனர் கூறியதால் காயத்ரி அப்படத்தில் இருந்து விலகி விட்டாராம். மேலும் இதுகுறித்து சமீபத்தில் அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.