சினிமா

திருமணத்திற்கு முன் காதலித்தேனா?? உண்மை இதுதான்!! முதன்முதலாக போட்டுடைத்த கயல் ஆனந்தி!!

Summary:

தமிழ்சினிமாவில் கயல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ந

தமிழ்சினிமாவில் கயல் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. அதனை தொடர்ந்து அவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்

இந்நிலையில் ஆனந்திக்கு தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருடன் சமீபத்தில் அண்மையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்தும் அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் ஆனந்தி தற்போது கமலி பிரம் நடுக்காவேரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 19ந்தேதி வெளியாகிறது.

நான் காதல் திருமணம் செய்ய வில்லை - கயல் ஆனந்தி

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் திருமணம் குறித்து கூறுகையில், என் திருமணத்தை சென்னையில் வரவேற்பு வைத்து அனைவரிடமும் கூற திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் வெளியே தெரிந்துவிட்டது. எனது திருமணம் முழுவதும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். காதல் திருமணம் கிடையாது. அவர் எங்க குடும்ப நண்பர். மெரைன் இஞ்சினியர். மேலும் அவர் இணை இயக்குனரும் கூட.

அவர் விரைவில் படம் இயக்கி எனக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். மேலும் தற்போது எனக்கு நிறைய படவாய்ப்புகள் வருகிறது. நடிப்பதற்கு எனது கணவர் குடும்பத்தார்கள் முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள்  என்று கயல் ஆனந்தி கூறியுள்ளார்.


Advertisement