சினிமா

சிறையிலிருந்து வெளியேறிய அம்மாவின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா.! முதன் முதலாக வெளிவந்த புகைப்படம் இதோ !!

Summary:

Kavin post photo with his mom and grandma

பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த வாரத்துடன் இறுதி நிலைக்கு வந்தது. மேலும் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்றார். சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மற்றும் ஷெரின் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் சரவணன் மீனாட்சி புகழ் கவின். அவரது அம்மா ராஜலக்ஷ்மி மற்றும் அவரது பாட்டி தமயந்தி ஆகியோரை திருச்சியில் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்த  வழக்கில் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு எதிராக அவரிடம் சீட்டு கட்டி ஏமாந்ததாக 34 பேர் சாட்சியும் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் சீட்டு கம்பெனி நடத்திய கவின் தாய் மற்றும் அவரது பாட்டி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மோசடி வழக்கில் ஐந்து ஆண்டு சிறையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 மேலும் அம்மா மற்றும் பாட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் அவருக்கு எந்த தகவலும் தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் முதல் வேலையாக இருவரையும் ஜாமினில் எடுத்தார். மேலும் அவர்கள் பட்ட கடனையும் அடைப்பதாக வாக்குறுதியளித்தார். இந்நிலையில் கவின் தற்போது  தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 


Advertisement