சினிமா வீடியோ

கிலி.. கிலி.. கிலி.. குஜிலி, குஜிலி! செம குஷியாக மொட்டை மாடியில் கவின் செய்த வேலையை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். கவின் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் களமிறங்கி நட்புனா என்னா தெரியுமா?  என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில், ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

 இன்னா மயிலு என தொடங்கும் இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் பாடியுள்ளனர். இந்த நிலையில் லிப்ட் படத்தின் பிரமோஷனுக்காக இன்னா மயிலு பாடலுக்கு மொட்டை மாடியில் கவின் நடனமாடிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் பாவக்கதைகள் பட நடிகர் ஜாபரும் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement