உள்ளாடை விளம்பரத்தில் நடித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்! நடிகை கஸ்தூரியின் கமெண்ட்டை பார்த்தீங்களா!!kasthuri-tweet-about-kl-rahul-act-in-innerwear-ad

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை கஸ்தூரி தற்போதும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். நடிகர் நடிகைகள் தொடர்பாகவும், அரசியல் உள்ளிட்ட பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சர்ச்சையில் சிக்க கூடியவர். இந்த நிலையில் அவர் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தது குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோலா, சிப்ஸ், ஆன்லைன் கேம் போன்ற விளம்பரத்தில் நடித்து பார்த்திருக்கிறோம். பல இந்திய விளையாட்டு வீரர்கள் ஆடை விளம்பரமும் செய்து வருகின்றனர். ஆனால் கே.எல்.ராகுலை உள்ளாடை விளம்பரத்தில் ஒரு குத்து சண்டை வீரர் போல், பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இது ஆண்களை கவரும் என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.