எதிலும் தமிழில்லை.. பொன்னியின் செல்வன் மீது மறைமுக கோபத்தை வெளிப்படுத்தும் நடிகை கஸ்தூரி..! கொந்தளிப்பில் ரசிகர்கள்..!!kasthuri-speech-about-ponniyin-selvan

 

தமிழர்களின் வரலாற்று கதையை மையமாகக்கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வசூல்வேட்டையை நடத்திய நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

மேலும் இப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, விக்ரம்பிரபு, பிரபுதேவா போன்றோரும் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் நேற்று திரையரங்கில் வெளியான இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் வந்தாலும், சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்திருந்தது. 

அந்த வகையில் நடிகை கஸ்தூரி படத்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் "ஆடம்பர இசை.. எத்தனையோ வாக்கியங்கள்... ஒன்றில் கூட தமிழில்லை.. அதனால் ஒட்ட முடியவில்லை" என்று கருத்து வெளியிட்டார். இதனை கண்ட சிலர் அதனை ஏற்றுக் கொண்டாலும், ரசிகர்கள் கடுமையான பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.