எதுக்கு வம்புனு பார்த்தேன்.. ஆனா! பிரபல நடிகர் மீது வழக்கு தொடரவிருக்கும் நடிகை கஸ்தூரி!!

எதுக்கு வம்புனு பார்த்தேன்.. ஆனா! பிரபல நடிகர் மீது வழக்கு தொடரவிருக்கும் நடிகை கஸ்தூரி!!


kasthuri-going-to-file-case-agaimst-payilvan-ranganatha

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களிலிருந்து ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன்.  பத்திரிக்கையாளரான இவர் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானதை விட நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக, அந்தரங்க கருத்துகளை பேசியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் அண்மையில் பேசிய வீடியோவில் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, ஓவியா குறித்து மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். இதனை ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

kasthuri

இந்த நிலையில் அதனை கண்ட நடிகை கஸ்தூரி, பீயை மிதிக்க கூடாதுன்னு தள்ளி நடக்கிறோம். அது  பயம் இல்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்.. இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான். மேலும் விரைவில் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும், இதற்காக நடிகர் சங்கம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆதரவளிக்குமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.