ஃபேஷன் ரிப்பீட்...24 வருடங்கள் முன்பு அம்மா அணிந்தது போன்ற உடையில் அசத்தும் மகள்... வைரலாகும் புகைப்படம்.!Kasthuri daughters latest photo

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் இணைத்து ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் அப்பொழுது அவருக்கென ஏரளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மேலும் நடிகை கஸ்தூரி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் செம  பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது இணையத்தில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் பெரும்பாலும் தனது குடும்பத்தினரது புகைப்படங்களை வெளியிடமாட்டார். ஆனால் தற்போது தனது மகளின் ட்ரெண்ட்ங் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது 24 வருடங்கள் முன்பு கஸ்தூரி அணிந்தது போன்ற உடையையே அவரது மகளும் அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார். அதனை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராமில் ஃபேஷன் ரிப்பீட் என பதிவு செய்து  புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.