சினிமா

கண்ணீருடன் வனிதா வெளியிட்ட வீடியோவை பற்றி என்ன நினைக்கிறீங்க! ரசிகரின் கேள்விக்கு நடிகை கஸ்தூரி கூறிய பதிலை பார்த்தீர்களா!

Summary:

நடிகை கஸ்தூரி, கண்ணீருடன் வனிதா வெளியிட்ட வீடியோவை குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் சமீபத்தில் வனிதா தனது பிறந்தநாளை கொண்டாட கணவர் பீட்டர் பால் மற்றும் இரு மகள்களுடன் கோவாவிற்கு சென்றார். அதனை தொடர்ந்து கோவாவிலிருந்து திரும்பும்போது பீட்டர் பால் பயங்கர குடிபோதையில் தகராறு செய்ததாகவும், அதனை  பொறுத்துக்கொள்ள முடியாமல் வனிதா அவரை விரட்டி விட்டதாகவும் தகவல்கள் பரவிவந்தது.

பின்னர் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர் பீட்டர் பால் குறித்தும், கோவாவில் என்ன நடந்தது என்பதைக் குறித்தும், கண்ணீருடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் வனிதாவின் நேற்றைய வீடியோவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த கஸ்தூரி, வீடியோ வேறயா? பாத்துட்டு சொல்றேன். கண்டிப்பாக அது சொல்வதெல்லாம் பொய் ரகத்தில் தான் இருக்கும் என கூறியிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில்,  அடக்கடவுளே இப்பதான் கண்ணீர் வீடியோவை பார்த்தேன். எடிட் பண்ணி ஸ்டைலா டைட்டில் கார்டுடன் உள்ளது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்றது என்ன பொழைப்போ! புரியல டா சாமி? எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லாரும் கெட்டவங்க வனிதா மட்டும்தான் பாதிக்கப்பட்டவர். எல்லாமே எதிர்பார்த்தது தான். ஆனால், எலிசபெத்தை குறைசொல்வது நம்பமுடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இதுல நாலு விளம்பர இடைவேளை வேற, இந்த வீடியோ மூலம் நல்ல வருமானம் சம்பாதித்து இருப்பார். இவர் பீட்டர் பாலின் மருத்துவமனை பில்லை திரும்ப பெறுகிறார் என நினைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement