இப்படிபட்ட ஷோவுக்கு என்னால வரமுடியாது! ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி!!

இப்படிபட்ட ஷோவுக்கு என்னால வரமுடியாது! ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி!!


Kasthuri answered to fan question about bigboss ultimate

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அண்மையில் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தும் வகையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில நாட்களிலேயே ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை எனவும், வைல்ட் கார்டில் வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு கஸ்தூரி, எனக்கு குடும்பம் இருக்கிறது. எனக்கென்று நிறைய வேலை இருக்கிறது. இந்த நச்சுத்தன்மை வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. மேலும் சேனலில் தரும் பணத்துக்காக போலிகள் நிறைந்துள்ள இந்த நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க முடியாது என பதிலளித்துள்ளார்.